×

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு

கரூர், அக்.17: தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்படுகிறது.கரூர் தெரசா கார்னரில் கழிவுநீர் ஓடை உள்ளது.இந்த கழிவு நீர் ஓடையில் குப்பைகள் அடைத்தும் புதர்மண்டியும் கிடக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் செல்வோர் இதில் வீசிஎறிந்துவிட்டு போய்விடுகின்றனர். இதனால் கொசு உற்பத்திக்கூடமாக மாறிவிட்டது. இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் து£ங்க முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கழிவுநீர் ஓடையை து£ர்வாருவதுடன் குப்கைளை போடுவதையும் தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags :
× RELATED சாயல்குடி அருகே பைப்லைன் உடைந்து...