×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

குளித்தலை, அக் 17:கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது இதனால் ஆங்காங்கே குளம் குட்டைகளில் நீர் நிலைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது மேலும் நகர்ப்புற பகுதியில் கொசு தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவ்வப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பொதுநல நோக்கோடு கரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குளித்தலை கிளை சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி பயணியர் விடுதி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அப்துல்லா தலைமை வகித்தார் . பன்னீர் விடுதி பஸ் நிலையம், காந்தி சிலை கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் போக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கினர் இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகி சென்றனர்.


Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா