×

காய்ச்சல் பாதித்த குழந்தையுடன் வந்தபோது ‘கியர் லிவர்’ உடைந்து நடுவழியில் நின்ற 108 ஆம்புலன்ஸ் கன்னியாகுமரி அருகே பரபரப்பு

நாகர்கோவில்:   கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரது தாயாரை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மதியம் 2 மணியளவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி வந்துள்ளது.
ஈத்தான்காடு அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது ஆம்புலன்ஸின் ‘கியர் லிவர்’ திடீரென்று உடைந்து டிரைவரின் ைகயோடு வந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தை டிரைவர் அப்பகுதியில் நிறுத்தி விட்டார். தொடர்ந்து வேறு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேறு வாகனம் கொண்டு வரப்பட்டு குழந்தை, தாயுடன் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குமரி மாவட்டத்தில் இயங்குகின்ற 108 ஆம்புலன்ஸ்கள் பல பழுதடைந்த நிலையில் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி