×

டாஸ்மாக் கடைகளின் எதிரே தரமற்ற உணவு பொருள் விற்பனை

கரூர், அக். 17: டாஸ்மாக் கடைகளின் எதிரே செயல்பட்டு வரும் சில உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் நகராட்சி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் முக்கிய சாலையோரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற கடைகளுக்கு வரும் குடிமகன்களை குறி வைத்து கடைகளின் அருகிலும், எதிர்ப்பகுதிகளிலும் சிக்கன், மட்டன் மற்றும் உட்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

குடித்து விட்டு வெளியே வரும் குடிமகன்களும் இதுபோன்ற கடைகளுக்கு சென்று தேவையான உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்திச் செல்கின்றனர். ஆனால், சில கடைகளில், தரமற்ற நிலையில் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன.தரமற்ற நிலையில் தயாரிக்கப்படும் இதுபோன்ற உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் நிலை உருவாகும் என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை ஒட்டி செயல்படும் கடைகள் தரமற்ற பொருட்களை பயன்படுத்துகின்றனரா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Task Shop ,
× RELATED சமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு:...