×

பெற்றோர் கோரிக்கை சான்றிதழ் விண்ணப்பத்தை அரசு டாக்டர் கிழித்தெறிந்தார்

கரூர், அக்.17: சான்றிதழ் விண்ணப்பத்தை அரசு டாக்டர் கிழித்தெறிந்ததாக பெண்புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு சென்றார். அப்போது அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் கிழிந்த விண்ணப்பத்தோடு மருத்துவமனை வாசலில் நின்றுகொண்டிருந்தார். கரூர் லைட்ஹவுஸ் பகுதியைசேர்ந்த சுசீலா என்ற அந்த பெண் விதவை உதவித்தொகை பெறுவதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்ததாகவும் அங்கு பணியில் இருந்த டாக்டரை அணுகியபோது கையெழுத்திட முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை கிழித்தெறிந்துவிட்டதாகவும் கூறினார். அப்போது ஆய்வுப்பணியினை முடித்துக் கொண்டு மருத்துவக்கல்லூரி டீன் ரோசிவெண்ணிலா காரில் வெளியே வந்தார், அவரை சந்திக்க சுசிலா முயன்றபோது கார் சென்றுவிட்டது. அங்குள்ள மருத்துவ அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் செய்தார். அவர்கள் வேறு விண்ணப்ப படிவம் கொண்டுவந்தால் கையெழுத்துப்பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்.


Tags : State Doctor ,
× RELATED சரியான சிகிச்சை இல்லை அரசு டாக்டரை...