×

சுங்ககேட் அருகே அரசு மாணவியர் விடுதியை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

கரூர், அக். 17: கரூர் சுங்ககேட் அருகேயுள்ள அரசு மாணவியர் விடுதியை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் சுங்ககேட் அருகே பல ஆண்டுகளாக அரசு மாணவியர் விடுதி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களாக இந்த விடுதி மாணவிகள் வேறு விடுதிக்கு சென்று விட்டதால் தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.இந்த கட்டிடத்தை பராமரித்து வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிட வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவு உள்ள காரணத்தினால் விஷ ஐந்துகளின் நடமாட்டமும் அதிகளவு உள்ளதாக கூறப்படுகிறது.எனவே, அரசுக்கு சொந்தமான கட்டிடம் எனில், இதனை பராமரித்து, வேறு அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Government Student Hostel ,Sunkadget ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்