திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசாரம்

விக்கிரவாண்டி, அக். 17: விக்கிரவாண்டி தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தேர்தல்  பிரசாரம் செய்தார். எம்பிக்கள் நவாஸ்கனி,  காங்கிரஸ் விஷ்ணு பிரசாத், திமுக செல்வம், எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் சுந்தரம், முகமது அபுபக்கர், மாவட்டசெயலாளர் அமீர் அப்பாஸ், நகர செயலாளர் சம்சுதீன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காதர்மொய்தீன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக, இன்று நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் எதிர்கால கனவை தகர்த்துள்ளனர். புதிய கல்வி கொள்கை மூலம், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற முடியாமல் அவர்களை பழைய நிலைமை படியே கூலித் தொழிலாளிகளாக மாற்றக் கூடிய நிலையை உருவாக்கி உள்ளார்.
Advertising
Advertising

மத்தியில் ஆளும் கட்சிக்கு அதிமுக அரசு துணை போவதால் கல்வி தரத்தில் தமிழகம் பின்னுக்கு செல்லுகிற நிலை உருவாகியுள்ளது. இன்னும் ஒன்றரை வருடங்கள் தான் உள்ளது என நினைத்து நீங்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் அவர்கள் மத்திய அரசுக்கு அடிமைகளாக இருந்து விடுவார்கள். அவர்கள்செய்வது அனைத்தும் நல்ல செயல்கள் என நீங்களே சான்று வழங்கியதாக ஆகிவிடும். ஆகவே வரும் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார்.

Related Stories: