தூக்குபோட்டு தொழிலாளி சாவு

திட்டக்குடி, அக். 17: திட்டக்குடி பேரூராட்சி பெரியார் நகரை சேர்ந்தவர் மலைக்கள்ளன்(49), கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி வசந்தா, இவரிடம் குடிக்கக்கூடாது என பல நேரங்களில் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதை கேட்காமல் தொடர்ந்து குடித்து கொண்டிருந்ததால் வசந்தா அவரிடம் கடந்த ஒரு வருடமாக பேசுவது இல்லையாம்.இந்நிலையில், சம்பவத்தன்று மலைக்கள்ளன் அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள வீமன் ஏரி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வசந்தா, திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Death ,
× RELATED தொழிலாளி திடீர் சாவு