×

பட்டாசு கடை உரிமம் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

ரிஷிவந்தியம், அக். 17:ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் கேட்டு வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் பகண்டை கூட்டு சாலையில் பட்டாசு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது  தீவிபத்து ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புடன் பட்டாசுகளை விற்பனை செய்யவேண்டும் என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வாசுதேவன், மண்டல துணை வட்டாட்சியர் சத்தியநாராயணன், அரியலூர் குறுவட்ட ஆய்வாளர் பூங்காவனம், வாணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணி, உதவியாளர்கள் சங்கர், ரமேஷ்  ஆகியோர் உடனிருந்தனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை