×

உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

வானூர்,  அக். 17: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உலக பெண்  குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. வானூர் தாசில்தார்  தங்கமணி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் பேரணியை  கொடியசைத்து துவக்கி வைத்தனர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி  வரவேற்றார். ேபரணி காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய  சாலைகள் வழியாக சென்றது. இதில் பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண்  குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி மாணவ மாணவிகள்  முழக்கமிட்டனர். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்  முத்துலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, தலைமை ஆசிரியர் ஜெயராமன், பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி சங்க  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : World Girl Day ,
× RELATED திருப்பைஞ்சீலியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி