×

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

சங்கராபுரம், அக். 17: சங்கராபுரம்  அடுத்த கல்லேரிக்குப்பம் ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக  வருவாய்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து கிராம உதவியாளர்கள்  கணேசன், மாரி ஆகியோர் அப்பகுதிக்கு சென்று திருட்டுத்தனமாக மணல் அள்ளிய டிராக்டர் டிப்பரை மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து  ஆலத்தூர் வருவாய் ஆய்வாளர் வசந்தராணிக்கு தகவல்  கொடுத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்துடிராக்டர் டிப்பரை சங்கராபுரம் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் விசாரனை  நடத்தி வருகின்றனர்.

Tags : Sand ,tractor tipper ,
× RELATED மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில்...