×

குடிநீர் தொட்டி மின்மோட்டார் பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, அக். 17:  சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பாலஞ்சேர்ந்தங்குடி கிராமம். இந்த கிராமம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும். இக்கிராமத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன் தெருக்களுக்கு மத்தியில் சாலையோரம் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த மினி குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதாகி செயல்படாமல் போனதால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மினி குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தின் அருகே குளத்திலிருந்து அகற்றப்பட்ட ஆகாய தாமரை செடிகளை கொட்டி வைத்துள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி மினி குடிநீர் தொட்டியை பார்வையிட்டு சரி செய்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Drinking Water Tank ,
× RELATED கீழக்கரையில் ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை