×

கெடிலம் ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

பண்ருட்டி, அக். 17:  பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணைக்கட்டு உள்ளது. அணைக்கட்டு முழுவதும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வீணாகிறது. இதனால் அப்பகுதியில் மழைக்காலத்தில் சரிவர செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் பணிக்கன்குப்பம், சீரங்குப்பம், சிறுவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கெடிலம் ஆற்றில் கருவேல மரங்கள் சுமார் 10 அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. இவற்றை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் இந்த ஆற்றில் மழை வரும்போது அருகில் உள்ள கிராமங்களில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். இது பற்றி அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பருவமழையை முன்னிட்டு வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவற்றை தூர்வரும் பணியை தீவிரமாக மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் இந்த கெடிலம் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது. எனவே அவசர காலம் கருதி கெடிலம் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : removal ,river ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...