×

பெண் உள்பட 3 பேரை வெட்டிய விவகாரம் நீதிமன்றத்தில் 2 லாரி டிரைவர்கள் சரண்

புழல், அக். 17: செங்குன்றம் அடுத்த கோட்டூர், கோமதியம்மன் நகர் பிரதான சாலையில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சித்ரா (29), அவரது கணவர் ராஜ் மற்றும் மகன் மோனிஷ் (10), சித்ராவின் தம்பி கார்த்திக் (26) ஆகியோர் வசித்து வருகின்றனர்.வீட்டின் மேல்தளத்தில் கணவரை பிரிந்த பவித்ரா (30) என்ற பெண் தனியே வசித்து வருகிறார். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து வீட்டு உரிமையாளரிடம் சித்ரா கூறியிருக்கிறார். இதையடுத்து பவித்ராவிடம் வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் வலியுறுத்தினார்.இதில் ஆத்திரம் அடைந்த பவித்ரா, தனது கள்ளக்காதலன் வினோத்திடம் சித்ராவை பழிவாங்குமாறு கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இரவு சித்ராவின் வீட்டுக்கு வினோத் சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ரா, கார்த்திக், மோனிஷ் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வினோத் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவரை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான வினோத் (23), மற்றொரு வினோத் (25) ஆகிய இருவரும் சரணடைந்தனர். இவர்களை விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்குன்றம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : lorry drivers ,court ,persons ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...