×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி


காஞ்சிபுரம், அக்.17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கிய சாரல் மழை நேற்று மதியம் வரை தொடர்ந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 45.4 மிமீ மழை பதிவானது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தாலும் கடந்த சில நாட்களாக அனல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டனர். பகலில் வெயிலின் தாக்கத்தாலும் இரவில் புழுக்கத்தாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவில் தொடங்கிய சாரல்மழை நேற்று மதியம் வரை நீடித்தது.  இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோன்று வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், கூடுவாஞ்சேரி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் மி.மீட்டரில்

Tags : public ,Kanchipuram district ,
× RELATED நிவர் புயல் கனமழையால் காஞ்சிபுரம்...