செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் உலக மாணவர் தின விழா

செங்கல்பட்டு, அக்.17: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் உலக மாணவர் தின விழா நேற்று முன்தினம் நடந்தது. வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஷ் சுராணா தலைமை வகித்தார். கல்விக்குழும இயக்குநர் ஆச்சார்யா பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள் அபிநேயாதேவி, பாவேஷ், ஆகியோர் வரவேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அவர் மாணவர்கள் உருவாக்கிய மாதிரி செயற்கோள்களை பார்வையிட்டு விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் கோவிந்தசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : World Student Day Festival ,Chengalpattu Vidyasagar Global School ,
× RELATED நீர்நிலையில் விதிமுறைகளுக்கு முரணாக...