×

மதுராந்தகத்தில் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்

மதுராந்தகம், அக். 17: டெங்கு காய்ச்சல் வருமுன் தடுக்கும் விதமாக மதுராந்தகம் உட்கோட்ட போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஎஸ்பி மகேந்திரன் கலந்து கொண்டு போலீசாருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.இதில் மதுராந்தகம் கோட்டத்தில் அடங்கிய மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், செய்யூர் உள்பட 8 காவல் நிலையங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் அருந்தினர். நிகழ்ச்சியில் டிஎஸ்பி மகேந்திரன், ‘காவல்துறையை சேர்ந்த, அனைத்து குடும்பத்தினரும் தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Tags : Madurai ,
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...