×

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் திறன் வளர்ப்பு பயிற்சி

உத்திரமேரூர், அக்.17: உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு மற்றும் தனியார் டிரஸ்ட் இணைந்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு தலைவர் டாக்டர் தேவன்பு தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ராமச்சந்திரன், குழந்தைகள் மக்கள் அமைப்பு துணை தலைவர் சுமதி, ஒருங்கிணைப்பாளர் ஆலீஸ், குழந்தைகள் மக்கள் அமைப்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிர்வாகி கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் டிரஸ்ட் நிர்வாகி கலைச்செல்வி வரவேற்றார்.

குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம், வளர்க்கும் முறைகள், கட்டாய கல்வி, குழந்தை திருமண தடை சட்டம், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல், பெண் குழந்தைகளிம் தொடு முறைகள், பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் குழந்தைகளை கண்காணித்தல், அங்கு ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் அனுகுமுறைகள் குறித்து கேட்டறிதல், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்குதல், கல்வி மேளாண்மை குழுவுடன் இணைத்து செயலாற்றுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.முடிவில் தன்னார்வலர் ஸ்டெல்லா நன்றி கூறினார். ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் தனபால், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...