×

ராஜகுமாரியில் கேரள அரசின் புதிய சட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்

மூணாறு, அக்.16: விவசாயிகள், வணிகர்களை பாதிக்கும் கேரள அரசின் புதிய சட்டத்தை கண்டித்து மூணாறு அருகே ராஜகுமாரி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இரவு பகல் போராட்டம் துவங்கியது.  மூணாறு அருகே அமைந்துள்ள ராஜகுமாரி பகுதியில் வணிக நோக்கங்களுக்காக கட்டிடங்கள்  கட்டவும், வணிக பொருட்கள்  உற்பத்தி செய்வதற்கு தடை ஏற்படுத்த கேரள அரசு சட்டதிருத்தங்களை அமல்படுத்தியது. இதன் காரணமாக விவசாயம் மற்றும் வணிகம் போன்றவற்றை நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் பதிப்படைந்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இந்த சட்டங்களை அமல்படுத்தி வரும் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மூணாறில் நடந்த இரவு பகல் போராட்டத்தை தொடர்ந்து உடும்பன்சோலை தொகுதி காங்கிரஸ் தலைமையில் நேற்று இரவு, பகல் போராட்டம் துவங்கியது. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக கேரளா மாநிலத்தில் 8 மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என்று இடுக்கி பாராளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸ் கூறினார். போராட்டத்தை கே.பி.சி.சி துணை தலைவர் ஏ.கே மணி துவக்கி வைத்தார். மேலும் கே.பி.சி சி செயலாளர் பாலன்பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொச்சுதெரிசியா பவுலோஸ் மற்றும் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags : party ,Congress ,Rajakumari ,government ,Kerala ,
× RELATED பீகாரில் விகாஷீல் ஸ்வராஜ் கட்சி காங்கிரசில் ஐக்கியம்