×

திருப்புத்தூரில் யோகா சாம்பியன்ஷிப்


திருப்புத்தூர், அக். 16:  திருப்புத்தூரில் தென்மாவட்ட அளவிலான யோகா போட்டி நடந்தது. ஏகாத்மா யோக விஸ்வ வித்யாலயா அசோசியேசன் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏகாத்மா யோக விஸ்வ வித்யாலயா அசோசியேஷன் செயலாளர் விஷ்ணுகுமார், நேஷனல் கேட்டரிங் சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர், ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஷாஜஹான் வரவேற்றார்.போட்டியில் திருப்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 400க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு,  கேடயம் வழங்கப்பட்டது. இதில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு கல்லூரி பொருளாதாரத்துறை பேராசிரியர் மரியரெத்தினம், ஏகாத்ம யோக விஸ்வ வித்யாலயா அசோசியேஷன், யோகா கேப்பிட்டல் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், விருதுநகர் மாவட்ட செயலாளர் குருநாதன், சகுபர் அலி, சையது ஹபிபுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.





Tags : Yoga Championships ,Thirupputhur ,
× RELATED திருப்புத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்