×

270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

உடுமலை, அக். 16:  உடுமலையில் கலப்பட டீத்தூள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உடுமலை  பகுதியில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்  அடிப்படையில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர்  விஜயலலிதாம்பிகை, உடுமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், பல்லடம்  நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவன்ராஜ் உடுமலையில் தாராபுரம் சாலையில்  உள்ள ஒரு குடோனில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு 270  கிலோ கலப்பட டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிைலயில் அங்கிருந்து 4  கிலோ உணவு மாதிரி எடுக்கப்பட்டு, மதுரை உணவு பகுப்பாய் கூடத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. மீதமுள்ள 266 கிலோ டீத்தூளை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல்  வைக்கப்பட்டது. உணவு மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி