×

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணி

கோவை, அக். 16: கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், இணை, துணை இயக்குநர் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக 6 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோவையில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகங்களில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவற்றிற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 10ம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய  பிசி, எம் பிசி, எஸ்சி, எஸ்சி.ஏ, எஸ்டி ஆகிய வகுப்பினருக்கு உச்ச வரம்பு இல்லை. இதற்கான அறிவிப்பு http://dish.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கூடுதல் இயக்குநர் அலுவலகம்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 525 தலைவாசல் காம்பளக்ஸ், கிராஸ்கட் ரோடு, கோவை 641 012 என்ற முகவரிக்கும், துணை, இணை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணை இயக்குநர் 1,  தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 525 தலைவாசல் காம்பளக்ஸ், கிராஸ்கட் ரோடு, கோவை 641 012க்கும், இணை இயக்குநர் 2,  தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 58, சிரியன் சர்ச் ரோடு முதல் வீதி, கோவை 641 001 என்ற முகவரிக்கும் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் சமர்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Office ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...