தடாகம் பகுதியில் வைத்துள்ள காற்று மாசு அளவீடும் கருவிகளை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும்

கோவை, அக். 16:  தமிழக விவசாய சங்கத்தினர் மாநில செயலாளர் வேலுநாயக்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த அம்மனுவில் கூறியிருப்பதாவது :  தற்போது தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மழை பெய்து வருவதால் காற்றில் இருக்கும் மாசின் அளவு குறைவாக இருக்கும். தற்போது செங்கல் சூளைகள் இயக்காமல் இருப்பதாலும், லாரிகளை இயக்காமல் இருப்பதாலும் நிச்சயம் மாசின் அளவுகளை முழுமையாக அளவிட முடியாது. எனவே, தற்போது எடுக்கப்படும் மாசு அளவுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை, எனவே காற்று மாசை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை 6 மாதங்கள் வரை நீட்டிக்கும் பட்சத்தில், மீண்டும் சூளைகள் இயக்கப்பட்டு, லாரிகளின் இயக்கமும் அதிகரிக்கும்போது உண்மையான அளவுகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

தடாகம் பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளதோடு, தண்ணீர் ஓடைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்கள் செங்கல் சூளைகளுக்காக மண் எடுப்பதால், காய்ந்து போய் நீரின்றி இருப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு அளவுகளை கணக்கிட 9 கிராமங்களில் காற்று மாசு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: