உள்ளாட்சி குடியிருப்புகளுக்கு 7000 சதுர அடி வரை கட்டிட அனுமதி

கோவை, அக். 16: உள்ளாட்சிகளில் கட்டிட அனுமதிக்காக வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வில் குடியிருப்புகளுக்கு 7000 சதுர அடி வரை கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் செயல்முறை ஆணை கடிதம் படி கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும், நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் திட்ட அனுமதி அனைத்து விதிகளுக்குட்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மே மாதம் 25ம் தேதி 2010ம் வருடம் முதல் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டிட அனுமதிக்கான

வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வில் தற்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ல் அரசால் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரப் பகிர்வு வழங்க பல கோரிக்கைகள் வரப்பெற்றது.

இதைத்தொடர்ந்து, உள்ளாட்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வின் பகுதி மாற்றம் செய்து குடியிருப்பு கட்டிடங்களின் உத்தேசங்களை பொறுத்தமட்டில் உள்ளாட்சிகளுக்கு கூடுதலாக அதிகாரப்பகிர்வு மனை ஒப்புதலுடன் கூடிய கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இதில் குடியிருப்புகளுக்கு, 4000 சதுர அடி தரை பரப்பு வரை, 4 குடியிருப்புகள் வரை கொண்ட  தரைத்தளம் மற்றும் முதல்தளம் அல்லது வாகன நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது வழங்கப்படும் மாற்றிய அதிகாரப் பகிர்வு மூலம் 7000 சதுர அடி தரை பரப்பு வரை, 8 குடியிருப்புகள் வரை கொண்ட 12 மீ உயரத்திற்கு மிகாத தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் அல்லது வாகன நிறுத்தும் தளம் மற்றும் மூன்று தளங்கள் அனுமதிக்கப்படுகிறது.  அதே போல் வணிக கட்டிடங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகார பகிர்வே தொடரும். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: