×

50 கிராமங்களில் கருப்புக்கொடி வேடசந்தூர் குடகனாற்றில் முட்செடிகள் முழுமையாக அகற்றப்படுமா?

வேடசந்தூர், அக். 16: வேடசந்தூர் குடகனாற்றில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேடசந்தூர் நகரின் குறுக்கே குடகனாறு செல்கிறது. இந்த ஆறு தான் வேடசந்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாசன வசதிக்கும், நிலத்தடி நீர்மட்டத்திற்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. வேடசந்தூரில் குடகனாற்றின் பாலம் அடியில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. குறிப்பாக பாலத்தின் தூண்கள் அருகே முட்செடிகள் அதிகளவில் காணப்படுவதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வேடசந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த முட்செடிகளை அகற்றாமல் விட்டதால்தான் கடந்த 2004, 2005ம் ஆண்டுகளில் அதிகளவில் தண்ணீர் வந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்தாண்டும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலை ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடகனாற்றில் உள்ள முட்செடிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : villages ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு