காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

ஈரோடு, அக்.16: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். காவல் பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக நீத்தார் நினைவு தினம் வரும் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஈரோட்டில் மினி மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது.

இதை எஸ்பி சக்திகணேசன் துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் ஓட்டம், ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை படை மைதானத்தை நிறைவடைந்தது. இப்போட்டியில் பெண் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். முதல் 3 இடம் பெற்ற போலீசாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories:

>