சென்னிமலை அருகே அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

சென்னிமலை, அக்.16: சென்னிமலை ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இளைஞர்களின் கல்வி எழுச்சி நாளான நேற்று அப்துல் கலாமின் வெண்கல சிலைக்கு கல்லூரி தலைவர் மக்கள் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறப்பு விருந்தினராக ஈரோடு கேஎம்கே நிறுவனங்களின் தலைவர் கண்ணன், தியாகி திருப்பூர் குமரன் வாரிசு அண்ணாதுரை, குமரன் நற்பணி மன்றம் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அப்துல்கலாமின் குரலில் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினர். பின்னர், அங்கு மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் சிலைக்கு கல்லூரி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Advertising
Advertising

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், விவசாயத்தை பாதுகாப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, அப்துல்கலாம் சிறப்புகளை பல குரல் கலைஞர்கள் எடுத்துரைத்தனர். இதில், பல குரல் கலைஞர்கள் ஈரோடு சீனி, அன்பு, கோவை குணா, சென்னை கிரி, சஞ்சய் உட்பட ஏராளமான கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு பரிசு

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கவுந்தப்பாடியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பரிசு வழங்கினார். அருகில், மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் பவானிசேகர், பிரகாஷ் உள்பட பலர் உள்ளனர்.

Related Stories: