குடிநீர் வடிகால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 16: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசாணை எண் 338யை அமல்படுத்த வேண்டும். வாரிய ஆணை எண் 505யை இந்த வட்டத்திற்குட்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

வாரியத்தில் உள்ள மின் மோட்டார்கள் பழுதுநீக்கி அனைத்தும் இயங்கும் வகையில் சரி செய்ய வேண்டும். போதிய மின்விளக்கு, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட ஆய்வக ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

>