×

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் போட்டி அக்.23ல் நடக்கிறது

திண்டுக்கல், அக். 16: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டி திண்டுக்கல்லில் அக்.23ம் தேதி நடக்கவுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வது அவசியம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2019-20ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒற்றையர் மாணவ, மாணவிகள் மற்றும் இரட்டையர் மாணவ, மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் வரும் அக். 23ம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. போட்டிகள் இளநிலை பிரிவு 1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை மற்றும் முதுநிலை பிரிவு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் (SDAT online Application) மூலமாக < www.sdat.tn.gov.in > என்ற இணையதளத்தில் ஆன்லைன் அப்ளிகேஷன் பார் காம்படிஷனில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அக்.22ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இளநிலை ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 250, மூன்றாம் பரிசு ரூபாய் 125 வழங்கப்படும். இளநிலை இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 1000, இரண்டாம் பரிசாக ரூபாய் 500, மூன்றாம் பரிசாக ரூபாய் 250 வழங்கப்படும். முதுநிலை ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 1000, இரண்டாம் பரிசு ரூபாய் 500, மூன்றாம் பரிசு ரூபாய் 250 வழங்கப்படும். முதுநிலை பிரிவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 2000, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாம் பரிசாக ரூபாய் 500 வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். நுழைவு கட்டணம் இல்லை. விளையாட வருபவர்கள் ஸ்ட்ரைக்கர் தாங்களே கொண்டு வரவேண்டும். போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்கள் மட்டுமே மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகை கோடிட்ட காசோலையாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0451-2461162 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : competition ,school ,
× RELATED கோவை, ராமநாதபுரம், நெல்லையில்...