தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

ஈரோடு, அக்.16:ஈரோடு கருங்கல்பாளையம் சின்னப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து மனைவி சுப்புலட்சுமி (51). டெய்லர். இவர், கேஎன்கே ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பணம் தேவைப்பட்டதால், சுப்புலட்சுமி சீட்டு போட்ட பணத்தை திரும்பி கேட்டு நிதி நிறுவனத்திற்கு கடந்த 27ம் தேதி சென்றார். அப்போது, நிறுவன உரிமையாளரான கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதியை சேர்ந்த பிரகாஸ் (39) மற்றும் அங்கிருந்த அன்னக்கொடி, நிவேதிதா, பிரியா ஆகியோர் பணம் தர முடியாது.

பணம் கேட்டு மீண்டும் வந்தால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சுப்புலட்சுமி ஈரோடு எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து எஸ்பி., சுப்புலட்சுமியின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கருங்கல்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நிதி நிறுவன உரிமையாளர் பிரகாஷ் உட்பட 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>