கஞ்சா, மது விற்பனை பெண் உள்பட 3 பேர் கைது

ஈரோடு, அக்.16: பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் துண்டன்சாலை பிரிவு பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானிசாகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பவானிசாகர் இக்கரை தத்தப்பள்ளி கலைஞர் நகரை சேர்ந்த கஞ்சாமணி மனைவி கிட்டாயாள் (60) என்பவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

பங்களாப்புதூர் கரும்பாறை பள்ளத்தில் வைத்து கஞ்சா விற்ற காடையம்பாளையம், கிழக்கு வீதியை சேர்ந்த ராக்கன் என்கிற கூலுவாயன் (40) என்பவரை போலீசார் கைது செய்ததோடு விற்பனைக்கு வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தூர் காசிபாளையத்தில் மது விற்ற சத்தி, மூலக்கிணறு பகுதியை சேர்ந்த பிரபு (33) என்பவரை கைது செய்ததோடு ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: