சாலை விபத்தில் வாலிபர் பலி

சத்தியமங்கலம், அக்.16:சத்தியமங்கலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த காளிச்சாமி என்பவரது மகன் சுப்பிரமணி (34). இவர், சத்தியமங்கலம்- கோவை சாலையில் சிமெண்ட் பைப் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது பைக்கில் பைப் கம்பெனி செல்வதற்காக சத்தியமங்கலம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

எஸ்ஆர்டி கார்னர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரியும், பைக்கும் மோதின. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணிக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சுப்பிரமணி இறந்தார்.

Related Stories:

>