சிங்கிகுளத்தில் ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

நாங்குநேரி, அக்.16: சிங்கிகுளத்தில் செயலிழந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றவேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

நாங்குநேரி அருகேயுள்ள சிங்கிகுளம் கைலாசபதி இந்து நடுநிலைப்பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது வலுவிழந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பாடில்லாத இந்த தொட்டி தற்போது சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காங்கிரீட் கம்பிகளுடன் கூடிய நான்கு தூண்களும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இதன் அருகில் உள்ள பள்ளியின் மாணவர்கள் அங்கு ஓடி விளையாடிவது வழக்கம். மேலும் ஊருக்குள் வந்து செல்லும் சாலை மற்றும் தெருவோராம் அபாய நிலையில் நீர்த்தேக்க தொட்டி உள்ளதால் எதிர்பாராவிதமாக இடிந்து விழும்போது உயிர்ப்பலி ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோல அங்கு மேலும் சில அரசு கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சிங்கிகுளத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆபத்தான அரசு கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: