தென்காசியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்

தென்காசி, அக். 16: தென்காசி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தென்காசி நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக நகர் முழுவதும் 6 பகுதிகளாக பிரித்து டெமிபாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து விடப்பட்டும் மற்றும் புகைமருந்து அடிக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சி மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கும் வகையில் அமைந்துள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உபயோகமற்ற டயர்கள், தேவையற்ற உரல்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தியும், தண்ணீர் தேங்கியுள்ள பாத்திரங்களில் கொசுக்கள் நுழையாத வகையில் மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். தங்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகும் வண்ணம் தண்ணீர் தேங்கும் திறந்த நிலையில் பொருட்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ளவர்களோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  சேர்த்து நகராட்சிக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கலெக்டர் ஷில்பா, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் காளிமுத்து, சுகதார பணிகள் துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுரைப்படி கடந்த 11 மற்றும் 12ம் தேதியில் நகர் முழுவதும் புகைமருந்து அடிக்கப்பட்டுள்ளது. தடுப்பு பணிகளை நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த்  தலைமையில் சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், சிவா, கணேசன், மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: