சங்கரன்கோவில், சேரன்மகாதேவி பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

சங்கரன்கோவில், அக்.16: சங்கரன்கோவில் அருகே சண்முகநல்லூரில் உள்ள ஸ்வர்ணா வித்யாஷரம் பள்ளியில் முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள், உலக தபால்தினவிழா, உலக கைகழுவுதல் தினம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் மீனா தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அய்யர் முன்னிலை வகித்தார். அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய படத்திற்கு ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கை கழுவி சுத்தமாக வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. உலக தபால்தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள மக்களை இணைக்கும் விதத்தில் முக்கிய பங்காற்றும் தபால் துறையின் சிறப்புகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து தபால்துறையின் சேவைகளை பாராட்டும் விதமாக மாணவ, மாணவியர்கள் தங்களது உறவினர்களுக்கு தபால் அட்டை முலமாக வாழ்த்துக்களை அனுப்பினர். நிகழ்ச்சிகளில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் திலகவதி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ராஜேஸ்கண்ணா   வரவேற்றார். இதில் அப்துல்கலாம் படத்துக்கு மாணவ, மாணவியர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் உருவம் பொறித்த 5ஆயிரம் கொடிகளை கையில் பிடித்து மாணவ - மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து “எழுதலாம் அப்துல்கலாம்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் பழனிச்செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. சப் கலெக்டர் அலுவலகம் மற்றும் சப் கலெக்டர் பங்களாவில் மரக்கன்றுகளை சப் கலெக்டர் பிரதிக் தயாள் நட்டுவைத்து பணியை துவக்கிவைத்தார். தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டினர். இதில் தாசில்தார் சந்திரன், தலைமை உதவியாளர் ராமச்சந்திரன், செயல் அலுவலர் முத்துக்குமார், கிராம உதயம் சுந்தரேசன், வக்கீல் புகழேந்தி பகத்சிங், கரிஸ்மா தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: