×

2 பைக்குகள் மோதல் ஜோதிடர் பரிதாப பலி மாடு வாங்க வந்தபோது விபத்து

மன்னார்குடி, அக். 16: மாடு வாங்க நண்பருடன் பைக்கில் வந்த ஜோதிடர் பெருக வாழ்ந்தான் அருகே விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (63) ஜோதிடர். இவர் தனது நண்பர் கணேசன் (61) என்பவருடன் மாடு வாங்குவதற்கு பெருகவாழ்ந்தான் அருகே உள்ள சித்தமல்லி கிராமத்திற்கு பைக்கில் வந்துள்ளார். அங்கு தனக்கு தேவையான மாடுகளை விலை பேசி முடித்து விட்டு தனது நண்பருடன் ஊருக்கு திரும்பி உள்ளார். சித்தமல்லி மாரியம்மன் கோயில் அருகே வந்த போது அங்கு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறொரு பைக் மீது எதிர்பாராத வகையில் பாலசுப்ரமணியன் ஒட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியே வந்த சிலர் பாலசுப்ரமணியன், கணேசன் ஆகிய இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோதிடர் பாலசுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. விபத்து குறித்து பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்ஐ ஜானகிராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Tags : astrologer ,
× RELATED ரூ.7 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஜோதிடர் கடத்தல்: மர்ம கும்பலுக்கு வலை