×

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, அக்.16:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இளைஞர்களின் எழுச்சிதினத்தை முன்னிட்டு பள்ளிமாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்து மரக்கன்றுகளை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திட்ட அலுவலர் சக்கரபாணிஏற்பாடுகளை செய்திருந்தார்.மாணவர்கள் அப்துல் கலாமின் பிறந்ததினத்தை குறிக்கும் வகையில் 89 வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags :
× RELATED சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்