கும்பகோணம் ஆசிகா தங்க மாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

கும்பகோணம், அக். 16: கும்பகோணம் ஆசிகா தங்க மாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியது.கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் ஆசிகா தங்கமாளிகை உள்ளது. தமிழகத்தில் உள்ள முன்ணனி நகை மாளிகையில் ஆசிகா தங்கமாளிகையும் ஒன்று. இந்நிறுவனத்துக்கு தஞ்சை மாவட்டம், இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் வெளிநாட்டிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் கூடிய சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கி நடந்து வருகிறது.

Advertising
Advertising

இதுகுறித்து ஆசிகா தங்கமாளிகை நிர்வாகிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்க நகை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள தங்க நகை வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான புதிய டிசைன் நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய டிரண்டிங் நகைகள் என்ற பெயரில் வேறெங்கும் காண முடியாத புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பழைய தங்க நகைகளுக்கு கூடுதல் மதிப்பு, 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு மிக குறைந்த சேதாரம் மற்றும் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி, வெள்ளி கொலுசுகள் மற்றும் மெட்டிகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, வைரத்தின் மதிப்பில் 15 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories: