வீட்டருகே பேருந்தை நிறுத்தாததால் டிரைவரை தாக்கியவருக்கு வலைவீச்சு

பேராவூரணி, அக். 16: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம்- அறந்தாங்கி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் வசிப்பவர் தங்கம் வாணதிரையர். இவர் பட்டுக்கோட்டையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது இவர் திருச்சிற்றம்பலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை இவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு ஆவணத்துக்கு நடைபயிற்சி சென்றார். அப்போது மழை தூறியதால் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி திருச்சிற்றம்பலத்துக்கு வந்தார்.

அப்போது சாலையோரம் உள்ள தனது வீட்டருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். ஆனால் நேரமாகி விட்டதாக கூறி அரசு பஸ் டிரைவர், சிறிதே தொலைவு உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில பயணிகளை இறக்கி விட பஸ்சை நிறுத்தினார். இதனால் தனது வீட்டு நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தததால் ஆத்திரமடைந்து தங்கம் வாணதிரையர், அரசு பஸ் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர் அங்கிருந்து தங்கம் வாணதிரையர் தலைமறைவானார்.இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் அரசு பஸ் டிரைவரான புதுக்கோட்டை டவுன் காந்தி நகரை சேர்ந்த போத்தி (40) புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போத்தி சேர்க்கப்பட்டார்.

Related Stories: