ஜூலை மாதத்துக்கான விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பரிசு

தஞ்சை, அக். 16: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் ஜூலை மாதத்துக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி (பொ) துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா வரவேற்றார்.இப்போட்டிகளில் 150 மாணவர்கள், 130 பெண்கள், வாலிபால் போட்டியில் 10 ஆண், 5 பெண் அணிகள், ஹாக்கி போட்டியில் 6 ஆண், 4 பெண் அணிகள், நீச்சல் போட்டியில் 50 மாணவர்கள், 22 மாணவிகள் என மொத்தம் 702 பேர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட விளையாட்டு பிரிவு பயிற்றுனர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மாவட்ட ஹாக்கி பயிற்றுனர் அன்பழகன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: