டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

திருவையாறு, அக். 16: திருவையாறு அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவையாறு அடுத்த மணக்கரம்பை கற்பகம் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. தஞ்சை மேலவீதியில் டைலர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் பிரேம்தாஸ், பி.காம் முடித்து விட்டு தஞ்சை புதுபஸ்ஸ்டாண்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

Advertising
Advertising

வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் செய்தார். திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன், சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் வந்து தடயங்களை பதிவு செயதனர். மேலும் நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: