பைக் மீது டிராக்டர் மோதி சலவை தொழிலாளி பலி

பேராவூரணி, அக். 16: பேராவூரணி அருகே ஆத்தாளூர் கிராமத்தில் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சலவை தொழிலாளி பலியானார்.பேராவூரணி அடுத்த ஆத்தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (60). இவர் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சலவை கடை நடத்தி வந்தார். பன்னீர்செல்வம் கடையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறிதது பன்னீர்செல்வம் மனைவி தமிழ்செல்வி அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>