×

பயன்பெற அழைப்பு நெல் வயலில் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்கும் பயிர் பாதுகாப்பு முறைகள்

அரியலூர், அக். 16: ரசாயன மருந்துகளைத் தொடர்ந்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன் படுத் துவதால் பூச்சிகளில் எதிர்ப்புத் தன்மை உருவாவது, தானியங்களில் எஞ்சிய நஞ்சாக தங்கி விஷத்தன்மை கொண்டதாகியது, பூச்சிகளில் மறுஉற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தீய விளைவுகள் ஏற்படு கிறது. மேலும் உற்பத்தி செலவும் அதிகமாகிறது.எனவே ரசாயன மருந்துகளை தவிர்த்து நெல் வயலில் நன்மை செய்யும் உயிரினங்களை அதிகரிக்கச் செய்வதனால் தீமை செய்யும் பூச்சிகளினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்து உயர் விளைச்சல் பெறுவதுற்கான சுற்றுச்சூழல் பொறியியல் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். இம்முறையில் வயல் வரப்புகளில் நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் பயிர்களான மேரிகோல்ட், சூரியகாந்தி, வெண்டை, எள் உள்ளிட்ட வற்றை வளர்ப்பதனால் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் சிலந்திகள் உள்ளிட்ட பல்வேறு நன்மை செய்யும் உயிரினங்கள் பூக்களின் வண்ணம் மற்றும் மகரந்தத்தினால் அதிக அளவில் கவர்ந்திழுக்கப்பட்டு பல்கி பெருகும். இவை நெற்பயிருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு அழிப்பதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், உணவு தானியங்களில் எஞ்சிய நஞ்சாக தங்குவது தவிர்க்கபடுகிறது. மேலும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.இதனால், வயல் தயாரிப்பு தனியாக மேற்கொள்ளத் தேவையில்லை. செலவு குறைவு. ஆனால் கிடைக்கும் வருவாய் அதிகம்.களைகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. நன்மைசெய்யும் பூச்சிகளுக்கு எவ்வித பாதிப்புமில்லை. சுற்றுச் சூழலுக்கு எவ்வித அச்சுறுத்தலிலுமில்லை. இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் கூறினர்.

Tags : rice paddy field ,
× RELATED நெல் கதிரடிக்கும் களமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை