×

அறிவியல் படைப்புகளை உருவாக்குவதில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்

பெரம்பலூர்,அக்.16: அறிவியல் படைப்புகளை உருவாக்குவதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வத்தை ஏற் படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு ஒரு தூண்டுகோளாக இருக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து எஸ்பி நிஷா பார்த்திபன் பேசினார்.பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (15ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக, அப்துல்கலாம் பிறந்த நாள், இளைஞர் எழுச்சிநாள், 47வது ஜவஹர்லால் நேரு, மாவட்ட அளவிலான கணிதம், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கன் வரவேற்றார். இந்த அறிவியல் கண்காட் சியை பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் திறந்து வைத்துப்பேசியதாவது:இங்கு மாவட்ட அளவில் சிறந்த படை ப்புகளாகத் தேர்வு செய்யப்பட்ட அறி வியல் படைப்புகள் மாநில அளவில், தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை புரிவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியல் படைப்புகளை உருவாக் குவதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு ஒரு தூண்டு கோலாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இல்லாமல், அறிவியல் படைப்புகளை மாணவ மாண வியர் புதிது புதிதாக உருவாக்குவத ற்காக அடிக்கடி அறிவியல் கண்காட்சிகளை நடத்த முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் செயலாளர் நீல்ராஜ், இயக்குநர் மணி, ராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிறுவனர் தலைவர் சிவசுப்ரமணியம், மாவ ட்டக் கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், மாரிமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 140 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியரின் 167 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன், பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன், கல்விநிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ் ஆகியோர் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி வளாகத்தில் எஸ்பி நிஷா பார்த்திபன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...