×

தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்,அக்.16: செந்துறை தீயணைப்புதுறை சார்பில் தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்புதுறை சார்பில் நிலைய அலுவலர் மணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் தனியார்பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் மாணவர்கள் பாட்டாசு வெடிக்கும் போது காட்டன் சட்டைகளை அணிய வேண்டும், அருகில் வாளியில் தண்ணீர் வைத்திருந்து எரிந்து முடிந்த மத்தாப்புகளை தண்ணீரில் போட வேண்டும், வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க கூடாது, பெற்றோர் துணையுடன் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என கூறினார். மேலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாசிக்குமாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கணபதிப்பிள்ளை, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது