×

நாகக்குடையான் செல்லப்ப ஐயனார் ஆண்டு திருவிழா

வேதாரண்யம், அக்.16: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் செல்லப்ப ஐயனார் காப்பு கட்டும் திருவிழா நடைபெற்றது. நாகக்குடையான் செல்லப்ப ஐயனார் முனீஸ்வர ஆலய ஆண்டு திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முன்னதாக செல்லப்ப ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. பின்பு ஆண்டு திருவிழாவிற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுதலைவர் ராமசாமி மற்றம் நிர்வாக குழு உறுப்பினர்கள், கிராமவாசிகள், செய்திருந்தனர்.

Tags : Nayakkudayan ,
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்