×

கரூர் நகர பகுதியில் அடிக்கடி சாலை விபத்து தடுக்க நடவடிக்கை பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், அக். 16: கரூர் நகரப்பகுதிகளில் அடிக்கடி நிலவி வரும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சி பகுதிகளை சுற்றிலும் மதுரை, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி போன்ற பகுதிகளுக்கான பைபாஸ் சாலைகள் உள்ளன. இதில், பைபாஸ் சாலைகள் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பைபாஸ் சாலைகளில் விபத்தில் சிக்கிக் கொள்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. குடிபோதையில் செல்வது, அதிக வேகத்துடன் செல்வது போன்ற பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை இது காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் போதிய கவனம் செலுத்தி விபத்தினை குறைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : road accidents ,city ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்