கோட்டக்குப்பம் சரக பகுதிகளில் வாகன தணிக்கையில் போலீசார் பாரபட்சம்

வானூர், அக். 16: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தணிக்கையில் காவல்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோட்டக்குப்பம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் கடந்த ஒரு மாதமாக காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராத தொகை விதித்து அனுப்புகின்றனர். ஆனால் சாலையில் அதிவேகத்துடன் செல்லும் டிப்பர் லாரிகளை போலீசார் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுபோல் அதிவேகமாக வரும் வாகனங்களால்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே காவல்துறையினர் அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளின் ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: