போதிய மருத்துவர்கள், கட்டிட வசதி இல்லை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி

சின்னசேலம், அக். 16: சின்னசேலம் அரசு மருத்துவமனையில் இடநெருக்கடியால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு கூடுதல் கட்டிடங்களை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சின்னசேலம் பஸ்நிலையத்தில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கூகையூர் சாலையில் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது அங்கு 20 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடமும் கட்டப்பட்டது. பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையை நம்பி சின்னசேலத்தை சுற்றி உள்ள அம்மையகரம், வாசுதேவனூர், பூண்டி, பாண்டியங்குப்பம், தகரை, கல்லாநத்தம், விபி அகரம், கனியாமூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர்.  சின்னசேலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த அரசு மருத்துவமனையில் இப்போது நோயாளிகள் கூட்டம் அதிகமாகிறது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்கு கூடுதல் கட்டிட வசதி இல்லை. இதனால் அங்கு அனுமதிக்கப்

படும் உள்நோயாளிகளுக்கு ேபாதிய படுக்கை வசதி இல்லாததால் சுகாதாரம் இல்லாத தரையில் படுக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்களும் இதனை கண்டுகொள்வதில்லை.

இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக சின்னசேலம் பகுதியில் ஒருவித விஷகாய்ச்சல் பரவி வருகிறது. விஷகாய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் அவதிப்படும் கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை வேண்டி சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.  அவ்வாறு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே ஒழிய அதற்கேற்ப போதிய இடவசதி அங்கு இல்லை. கூடுதல் மருத்துவர்களும் இல்லை. தற்போது சுமார் 25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் இடம் இல்லாமல் தினமும் வீட்டுக்கு சென்று வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிப்பதுடன், கூடுதல் கட்டிட வசதியும் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: