புதுச்சேரி துறைமுக வளர்ச்சிக்காக புதிய திட்டம்

புதுச்சேரி, அக். 16:   மத்திய கப்பல்துறை அமைச்சர் மன்சுக் எம் மாண்டவியா தலைமையில்   17வது எம்எஸ்டிசி கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநில துறைமுக அமைச்சர்கள், மத்திய அரசு செயலர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி சார்பில் மாநில துறைமுக அமைச்சர் கந்தசாமி மற்றும் வளர்ச்சி ஆணையர் அன்பரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
Advertising
Advertising

கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், புதுச்சேரி துறைமுகத்தின் வளர்ச்சி திறனை கருத்தில் கொண்டு மத்திய கப்பல் அமைச்சகம், புதுச்சேரி துறைமுக வளர்ச்சிக்காக ஒரு முன்னேற்ற திட்டத்தை மாநில அரசுடன் ஆலோசித்து தயாரிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டத்தை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறையேனும் கூட்டி துறைமுக வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், சிறிய துறைமுகங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எம்எஸ்டிசி கூட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும், என்றார். கூட்டத்தின் முடிவில் சிறிய துறைமுகங்கள் பெரிய துறைமுகங்களோடு இணைந்து செயல்படவும் அதன் வளர்ச்சிக்காகவும் ஒரு ஆலோசனை குழு அமைத்து செயல்திட்டம் வகுத்து மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: